வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எடுத்தது. பின்னர் குஜராத் அணி 19 ஓவர்களில் டிஎல்எஸ் விதியின்படி 147/7 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இந்த சீசனில் குஜராத் அணியில் டாப் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
ஒரே சீசனில் ஓரணியில் இருக்கும் 3 வீரர்கள் 500-க்கும் அதிகமான ரன்கள் குவித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணியில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் மூவரும் 500 ரன்களை கடந்துள்ளார்கள்.
ஐபிஎல் 2025-இல் அதிக ரன்கள் அடித்தவர்கள்
1. சூர்யகுமார் யாதவ் - 510 ரன்கள் (மும்பை இந்தியன்ஸ்)
2. சாய் சுதர்சன் - 509 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
3. ஷுப்மன் கில் - 508 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
4. விராட் கோலி - 505 ரன்கள் (ஆர்சிபி)
5. ஜாஸ் பட்லர் - 500 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)