‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா
ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!
ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பைக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட பரபரப்பான போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதாகக் கூறி மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், போட்டியின் நெறிமுறைகளை மீறியதாகக் கூறி குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
மெதுவாகப் பந்துவீசியதற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மூளையதிர்ச்சி மாற்றுவீரர் (concussion substitute), இம்பாக்ட் பிளேயர் உள்ளிட்ட மற்றவீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஷிஷ் நெஹ்ராவுக்கு எதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் அவர் கடுமையாக நடந்துகொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கள நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.
நெஹ்ராவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. அவர் ஐபிஎல் விதி 2.20-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால், களநடுவரின் தீர்ப்பே போதுமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?