Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்து...
15 ரன்களை கட்டுப்படுத்த முடியாதா? தீபக் சஹாரை வசைபாடும் மும்பை ரசிகர்கள்!
குஜராத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் தீபக் சஹாரை ஆபசமாகப் பேசி வருகிறார்கள்.
வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எடுத்தது.
மழையின் காரணமாக போட்டி பலமுறை தடைப்பட்டது. கடைசியில் 18 ஓவர்கள் முடிந்தபோது கடைசி ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் குஜராத் வெற்றி பெறும் என டிஎல்எஸ் விதிமுறையின்படி அறிவிக்கப்பட்டது.
குஜராத் அணியோ 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
கடைசி ஓவரை தீபக் சஹார் வீச மும்பை இந்தியன்ஸ் அணியினர் முடிவெடுத்தனர்.
கடைசி ஓவரில் 4 1 6 N1 (நோ பால் +1) 1 W 1 என மொத்தம் 15 ரன்களை தீபக் சஹார் கொடுத்தார்.
கடைசி பந்தில் ரன் அவுட் செய்யும் வாய்ப்பும் மும்பை அணிக்கு கிடைத்தது. ஆனால், அதையும் தவறவிட்டார்கள்.
Hardik Pandya miss throw...
— IndiaPulse: News & Trends (@IndiaPulseNow) May 6, 2025
He must have thrown to surya, he was close to stump
Lost a close win match, decision to send Deepak Chahar was waste#MIvsGT | #GTvsMIpic.twitter.com/zRdwaPNnyp
இந்தத் தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தீபக் சஹாரின் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆபசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த சீசனில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா கேப்டனாகும்போதும் இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.