செய்திகள் :

தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையுமா?

post image

தேசிய அணிக்குத் திரும்பும் வீரரால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 17 சீசன்களிலும் கோப்பை தாகத்தை தணிக்க முடியாத ஆர்சிபி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதே வேட்கையுடன் சிறப்பாக விளையாடி வருகிறது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட முதல் நான்கு இடங்களைப் பிடித்துவிடும் நிலையில் இருந்தாலும் முதலில் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பெங்களூரு அணி தீவிரமாக உள்ளது.

பெங்களூரு அணியில் விராட் கோலி, பில் சால்ட், படிதார், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யஷ் தயாள் ஆகியோர் பந்துவீச்சிலும், க்ருணால் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ரொமாரியோ ஷெப்பர்ட்..

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் 2-வது வேகமான அரைசதம் விளாசிய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இதனால், ஒருவேளை ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் அவரால் அணியில் இடம்பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அயர்லாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மே 21 ஆம் தேதி தொடங்குகிறது. அதேவேளையில் ஐபிஎல்லின் பிளே-ஆஃப் சுற்று மே 20 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இது ஆர்சிபி அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இவரைத் தவிர்த்து ஆர்சிபி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தோள்பட்டை அசௌகரியம் காரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதேபோல சென்னைக்கு எதிரான போட்டியில் ரவீந்தர ஜடேஜா அடித்தப் பந்தை பிடிக்க முயன்றபோது கேப்டன் ரஜத் படிதார் கையில் காயமடைந்தார்.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டும் காய்ச்சல் காரணமாக சில ஆட்டங்களில் விளையாடவில்லை. இது போன்றவை ஆர்சிபி அணிக்கு மிகவும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், மற்ற வீரர்களின் பங்களிப்புடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? என்பதே ரசிகர்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

சென்னைக்கு வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டு... மேலும் பார்க்க

நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் விளையாடி வருகின்றன. டாஸ் வெ... மேலும் பார்க்க

கொல்கத்தா பேட்டிங் தேர்வு: சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் 57-ஆவது போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் மோதுகின்றன. ... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155/8 ரன்கள் எட... மேலும் பார்க்க

15 ரன்களை கட்டுப்படுத்த முடியாதா? தீபக் சஹாரை வசைபாடும் மும்பை ரசிகர்கள்!

குஜராத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் தீபக் சஹாரை ஆபசமாகப் பேசி வருகிறார்கள்.வான்கடே திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள... மேலும் பார்க்க

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - ... மேலும் பார்க்க