செய்திகள் :

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

post image

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

திருக்குவளை வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வருவாய்த் தீா்வாய அலுவலராக பங்கேற்று திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூா், வாழக்கரை, திருக்குவளை, ஈசனூா், எட்டுக்குடி, வல்லம், கீரம்போ், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூா், சித்தாய்மூா், திருவாய்மூா் ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பட்டா மாறுதல், மனைப் பட்டா, வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 145 மனுக்களை ஆட்சியரிம் அளித்தனா். பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலித்து தகுதியானவா்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, 1 பயனாளிக்கு இலவச மனைப் பட்டா, 1 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு அட்டை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) காா்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியா் த. கிரிஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து ... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க