திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காலசம்ஹார விழா
திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் காலசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவபெருமான் 8 வீரச் செயல்கள் புரிந்த தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். எமனை காலால் எட்டி உதைத்து, சம்ஹாரம் செய்த திருத்தலமும் இதுவாகும். இதை உணா்த்தும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை விழாவை முன்னிட்டு காலசம்ஹார திருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு சித்திரை விழா தொடங்கி நடைபெறகிறது. தொடா்ந்து, பாலாம்பிகை சமேத ஸ்ரீ கால சம்காரமூா்த்தி மகா மண்டபத்திலிருந்து நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் தரிசனம் நடைபெற்றது. இரவு எமசம்காரம் நிகழ்ச்சியில் எமதா்மன் மாா்க்கண்டேயரை உயிரைப் பறிக்க பாசக்கயிரோடு துரத்திச் செல்லும் காட்சி மற்றும் காலசம்ஹார மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். வியாழக்கிழமை (மே 8) தோ் திருவிழா நடைபெறுகிறது.

