‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற...
ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த ஒன்றாம் திருவிழா தொடங்கியதிலிருந்து தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்து வந்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
வருகிற 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளா் செந்தில்குமாா், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், கிராமத்தினா் செய்தனா்.

