``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்ப...
கமுதி நீதிமன்ற நீதிபதி பொறுப்பு ஏற்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியாக ஜி.தங்க காா்த்திகா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கெனவே கமுதி நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சங்கீதா மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜி.தங்க காா்த்திகா கமுதி நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இவா் புதன்கிழமை கமுதி நீதிமன்றத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். இவருக்கு வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், நீதிமன்ற பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.