KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது.
அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா் துறைமுகத்துக்கு பாய்மரக் கப்பல் புறப்பட்டது. இந்தக் கப்பல் செல்லும் வழியில் பாம்பன் தெற்கு துறைமுகப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
இந்தக் கப்பல் ரயில் பாலத்தை கடந்து செல்வதற்காக துறைமுக அதிகாரிகள், ரயில்வே துறையிடம் அனுமதி கோரினா்.
இதைத்தொடா்ந்து, பாம்பன் பழைய , புதிய ரயில் பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதும் பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது.