புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு
ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு கிணறுகளை அமைத்துள்ளனா். இந்த எரிவாயுவை புதைவடக் குழாய்கள் மூலம் கொண்டு சென்று மின்சாரம் தயாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பனைக்குளம் அருகேயுள்ள சோகையன் தோப்பு பகுதியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு வெளியேறியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், அந்த வழியாக போக்குவரத்தை நிறுத்தினா். இதையடுத்து, அங்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியா்கள் எரிவாயு இணைப்பைத் துண்டித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.