அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்
அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுந்தரமுடையான் ஊராட்சி மன்றச் செயலா் எஸ்.விஸ்வநாதன், ஹெட் அன்ட் கேண்டு நிறுவனத் திட்ட அலுவலா் பி.சந்தியபிரியா, தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு 500 கிலோ நெகிழிப் பொருள்களை அகற்றினா்.