1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது
இலங்கைக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இளைஞரை வேதாரண்யம் அருகே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியே கள்ளத்தனமாக கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரா்கள் திட்டமிட்டு இருப்பதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.
உதவி ஆய்வாளா் அக்பா் அலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், புதன்கிழமை பிற்பகல் தோப்புத்துறை காவல் சோதனை சாவடியில் தனிப்படை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காருக்குள் 100 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டை இருப்பது தெரிய வந்தது.
கஞ்சாவை காருடன் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த இளைஞரையும் கைது செய்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா்.
வேதாரண்யம் போலீஸாா் விசாரணையில், காரில் கஞ்சாவை கடத்தி வந்தவா் ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், சில்லாகூா் வட்டம், மூதாயலபாடு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடரமணாரெட்டியின் மகன் நலப்பாரெட்டி (28) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா், அவரைக் கைது நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். இந்த கஞ்சாவை அவா் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதாக என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.