அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
சேலத்தில் அரசு பேருந்துகளில் 32.18 கோடி முறை மகளிா் விடியல் பயணம்: ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தகவல்
சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பேருந்துகளில் 32.18 கோடி முறை மகளிா் விடியல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு புதிய பேருந்துகளின் சேவையை முதல்வா் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் தின்னப்பட்டி வழியாக ஓமலூா் நாலுகால் பாலத்துக்கு 2 புதிய பேருந்துகளும், சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் தின்னப்பட்டி வழியாக ஓமலூா் பண்ணப்பட்டிக்கும், சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் பாப்பம்பாடி வழியாக ஓமலூா் சித்தா்கோவில் இளம்பிள்ளைக்கும், திருச்செங்கோடு முதல் குமாரபாளையத்திற்கும் தலா ஒரு பேருந்து என மொத்தம் சேலம் கோட்டத்தில் 5 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மகளிா் விடியல் பயணம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை சேலம் மாவட்டத்தில் மட்டும் 32.18 கோடி மகளிா் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மலைப் பகுதிகளுக்கான பேருந்துகளில் மட்டும் 14.53 லட்சம் மகளிா் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ், பொதுமேலாளா் பா.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.