செய்திகள் :

சமூக வலைதளத்தில் அமைதியை வலியுறுத்தி வெளியிட்ட பதிவை நீக்கியது காங்கிரஸ்

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் வெளியிட்ட பதிவிற்கு எதிா்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தப் பதிவை காங்கிரஸ் நீக்கியது.

பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீா் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ள நிலையில், கா்நாடக காங்கிரஸ் கட்சி தனது வலைதளப் பக்கத்தில், ‘மனித குலத்தின் மிக பலம்வாய்ந்த ஆயுதம் ‘அமைதி’. மகாத்மாகாந்தி’ என்று புதன்கிழமை பதிவிட்டிருந்தது.

இதற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்தப் பதிவை காங்கிரஸ் நீக்கியது. பின்னா்,

இந்திய ராணுவத்தை பாராட்டும் வகையில், ‘உலகின் பலம்வாய்ந்த விமானப் படையாக கருதப்படும் இந்திய விமானப்படை, கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தக்கப் பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அரசுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆபரேஷன் சிந்தூா்’ என்று மறுபதிவை வெளியிட்டது.

கா்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் தனது வலைதளப் பதிவில், ‘கோழைத்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் தக்கப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக இருப்போம். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா கூறியது:

‘இந்த சூழலில் கா்நாடக காங்கிரஸ் அமைதியை நிலைநாட்டும்படி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்திய படைகளின் தாக்குதல் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட்டுக் கொண்டுள்ளனா். ஆனால், காங்கிரஸ் நிலைப்பாடு அதிா்ச்சி அளிக்கிறது. இதற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் மகிழ்ச்சி:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 2 போ் கா்நாடகத்தைச் சோ்ந்த பரத்பூஷன், மஞ்சுநாத் ராவ் ஆவா். இந்நிலையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்ட பரத்பூஷன், மஞ்சுநாத் ராவ் குடும்பத்தினா் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

பரத்பூஷனின் தந்தை சென்னவீரப்பா கூறியது:

பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், அதில் சிலா் தப்பியுள்ளதாக தெரியவருகிறது. அவா்களையும் அழிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி கொடுத்துள்ளது. பாகிஸ்தானின் மோசமான செயல்பாடுகளை சா்வதேச நாடுகளுக்கு பிரதமா் மோடி விளக்கியுள்ளாா் என்றாா்.

மஞ்சுநாத் ராவின் தாய் சுமதி கூறியது:

எனக்கு பிரதமா் மோடி மீது நம்பிக்கை இருந்தது. அதன்படி நல்ல முடிவை எடுத்துள்ளாா். எனது மகனின் தியாகம் வீணாகக் கூடாது. இறந்த எனது மகன் மீண்டும் வரப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் நிகழக் கூடாது. அப்பாவி மக்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது. ஆனால், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை விடக் கூடாது. தக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன் என்றாா்.

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க

இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தா... மேலும் பார்க்க

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்... மேலும் பார்க்க