செய்திகள் :

DD Next Level: "கெளதம் மேனன் சார்கூட 'உயிரின் உயிரே' ரீ கிரியேஷன்ல நடிச்சது..." - யாஷிகா ஆனந்த்

post image

சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

'டிடி ரிட்டன்ஸ்' இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

சந்தானத்துடன் கஸ்தூரி, மாறன், யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்
‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்

படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்தில் 'உயிரின் உயிரின்' பாடலை கெளதம் மேனனும், யாஷிகா ஆனந்தும் மீள் உருவாக்கம் செய்திருந்த காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது.

அந்தக் காட்சியைப் பற்றி யாஷிகா ஆனந்த் பேசுகையில், "சினிமா துறையே ஒரு பொழுதுபோக்கு துறைதான்.

ஏதாவது வித்தியாசமான வகையில் மக்களை திருப்திபடுத்த வேண்டும். படத்தில் ஒரு புகழ்பெற்ற பாடலை மீள் உருவாக்கம் செய்ததில் மகிழ்ச்சி.

அதுவும் அந்தப் பாடலை இயக்கிய இயக்குநருடன் செய்ததில் இன்னும் மகிழ்ச்சி. இதற்காக இப்படத்தின் இயக்குநர் ப்ரேம் ஆனந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரிஜினல் பாடலில் வருவதைப் போல கடற்கரையில் ஓடினேன்.

Yashika Anand
Yashika Anand

சொல்லப்போனால், கடற்கரையில் இரண்டு மூன்று முறை கீழே விழுந்தேன்.

அந்தக் காட்சியைப் பற்றிய மீம்களைப் பார்க்கும்போது எனக்கும் நகைச்சுவையாக உள்ளது.

டிரெய்லரிலேயே இப்படியான விஷயங்கள் இருக்குமென்றால் படத்தில் இன்னும் பல விஷயங்கள் இருக்கும். நீங்களும் அதை எதிர்பார்க்கலாம்.

கெளதம் மேனன் சாருடன் நடிப்பதே மிகப்பெரிய வாய்ப்பு. இதுவும் நல்ல அனுபவமாக இருந்தது." என உற்சாகத்துடன் கூறினார்.

``நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும்'' - கரையானால் நிலைகுலைந்த குடும்பம்; நெகிழ வைத்த லாரன்ஸ்!

ஒரு ஏழைக் குடும்பம் சிட்டுக் குருவி போல பல ஆண்டுகளாகச் சேமித்த ஒரு லட்சம் ரூபாயை ஒரு டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்தது.பின்னர் ஒரு தேவைக்காக அதை எடுத்துப் பார்த்த குடும்பத்தினர், பணம் முழுவதைய... மேலும் பார்க்க

Ajith: 'அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்' - அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.நடிகர் ... மேலும் பார்க்க

Tamil Cinema : `கிடப்பில் இருக்கும் படங்களில் விரைவில் திரைக்கு வருவது எவை எவை?’

'மதகஜராஜா'வின் வெற்றி பல படங்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்துவிட்டது. பல்வேறு சிக்கல்களால் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம், ப... மேலும் பார்க்க

``அவர் செய்த உதவியை நான் மறந்தா? எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது..'' - தனுஷ் குறித்து ரோபோ சங்கர்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோக... மேலும் பார்க்க

Robo Shankar: "இனி அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சதுனு சொன்னாங்க; ஆனா..." - ரோபோ சங்கர் உருக்கம்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, ம... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன்: ``அம்மா என்றழைக்காத உயிரில்லையே..'' - அம்மா பிறந்தநாளில் நெகிழ்ந்த சி.கா!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தாய் ராஜி தாஸ் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தள பக்கங்களில்,"அடுத்திங்கு பிறப்பொன்றுஅமை... மேலும் பார்க்க