ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் காவல் துறை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும், விளக்கு வெளிச்சத்தையும் தவிர்க்குமாறும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நடுவானிலேயே இந்திய ராணுவம் அவற்றை தாக்கி அழித்தது.
ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.