பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
லாகூரில் இந்திய ராணுவம் தாக்குதல்! பாகிஸ்தானுக்கு பதிலடி
புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வான் வழி தாக்குதல்களை இன்றிரவு நடத்தியது. இந்திய எல்லைக்குள் பறந்த அந்நாட்டின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டதால் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.
இந்த தாக்குதல்களால் இந்தியாவில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு பதிலடியாக லாகூரில் இந்திய ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கல் தெரிவிக்கின்றன.