பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!
பஞ்சாபின் பதான்கோட் அருகில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா மீது தாக்குதல் நடத்திய எஃப்-16 விமானம் மற்றும் ஜேஎஃப்-17 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் விமானம் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை