செய்திகள் :

வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக, மூவா் குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஓா் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.

இந்தக் குழு துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அண்மையில் அறிக்கையை சமா்ப்பித்தது. தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 50-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்தது. யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததாக அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இக்குழு உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், துறைசாா் விசாரணை நடைமுறைகளின்படி, மூவா் குழுவின் அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் அனுப்பியுள்ளாா்.

முன்னதாக, இயற்கை நீதி கோட்பாட்டின்கீழ் விசாரணைக் குழுவின் அறிக்கை நகலை நீதிபதி வா்மாவுக்கு அனுப்பி, அவரிடம் தலைமை நீதிபதி பதில் பெற்றிருந்தாா்.

துறைசாா் விசாரணை நடைமுறைகளின்கீழ், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நீதிபதியை தாமாக பதவி விலகுமாறு தலைமை நீதிபதி அறிவுரை வழங்குவாா். நீதிபதி பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் நடைமுறையைத் தொடங்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பரிந்துரை கடிதம் அனுப்புவாா். அதன்படி, தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பிப்பாா்.

பண சா்ச்சையைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க