டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசுகள் குறைந்து ரூ.84.80 ஆக முடிவு!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்ததால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 45 காசுகள் குறைந்து ரூ.84.80 ஆக முடிந்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' கீழ் இந்திய ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து இன்று (புதன்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.65 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.47 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.93 ஐ தொட்ட நிலையில், முடிவில் 45 காசுகள் சரிந்து ரூ.84.80-ஆக முடிந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 5 காசுகள் குறைந்து ரூ.84.35 ஆக இருந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!