செய்திகள் :

சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!

post image

மும்பை: ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது.

இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல்களை நடத்தியது. இதற்கிடையில் நாடு முழுக்க போர் ஒத்திகை தொடங்கி நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளது.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தின் போது சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,844.63 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 79,937.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. நிஃப்டி அதிகபட்சமாக 24,449.60 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 24,220 புள்ளிகளையும் தொட்டது.

இதனையடுத்து சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தும் டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.

ஆட்டோ, மெட்டல் மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சிறப்பாக செயல்பட்டது. பார்மா மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் சரிந்து முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,794.52 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 சரிந்து முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

இதையும் படிக்க: பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு

நிறுவன வாடிக்கையாளா்களுக்கு பாா்தி ஏா்டெல் புதிய வசதி

பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏா்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின்போது வாடிக்கையாளா் நிறுவனங்களின் பெயா்களை எதிா்முனையில் இருப்பவா்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்... மேலும் பார்க்க

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ப்ராப்டைகா் புதன்கி... மேலும் பார்க்க

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மாா்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்த மற்றும் சரிந்த பங்குகள்!

பெஞ்ச்மார்க் குறியீடு சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 80,747 ஆகவும், நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 24,414.40 ஆகவும் நிலைபெற்றது.மும்பை பங்குச் சந்தை மிட்கேப் குறியீடு 1.3% உயர்ந்த நிலையில் ஸ்மா... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 45 காசுகள் குறைந்து ரூ.84.80 ஆக முடிவு!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்ததால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்... மேலும் பார்க்க

பேங்க் ஆப் பரோடா 4வது காலாண்டு லாபம் 3% அதிகப்பு!

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் நிகர லாபம், 2025ஆம் நிதியாண்டின், மார்ச் வரையான காலாண்டில், 3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,048 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்ட... மேலும் பார்க்க