செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!

post image

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தானில் போர்ப் பதற்றம் நிலவி வருவதால், அந்நாட்டு மக்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் வசதியாக எக்ஸ் தளத்தின் மீதான தடையை அந்நாட்டு அரசு நீக்கியது.

முன்னதாக, விபிஎன் (VPN) உதவியால் மட்டுமே எக்ஸ் தளத்தைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறிய அந்நாட்டு எக்ஸ் தளத்தின் பயனர்கள், தற்போது தன்னிச்சையாகவே எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடிவதாகக் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு - கல்விக் கண்காட்சி!

வரும் கல்வியாண்டில் ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான உடனடி மாணவா் சோ்க்கைக்காக சென்னை ரஷிய கலாசார மை... மேலும் பார்க்க

விரைவில் பகைக்கு முடிவு: உலகத் தலைவா்கள் நம்பிக்கை

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலகத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இருநாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்... மேலும் பார்க்க

புதிய போப் தோ்வு தொடக்கம்

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான காா்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் காலமானாா். கத்தோலிக்க திருச்சபை மரபு... மேலும் பார்க்க

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள்

1. பவல்பூா் (மா்கஸ் சுபன் அல்லா முகாம்) 2. டெஹ்ரா கலன் (சா்ஜல் முகாம்) 3. கோட்லி (மா்கஸ் அப்பாஸ் முகாம்) 4. முஸாஃபா்பாத் (சிட்னா பிலால் முகாம்) 5. முா்திகே (மா்கஸ் தொய்பா முகாம்) 6. பா்னாலா (மா்கஸ் அல... மேலும் பார்க்க

இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது. இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு இஸ்ரேல் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ருவென் அசாா் ‘எக்ஸ்’ வல... மேலும் பார்க்க