முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா
அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது.
சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவ்பூரில், பூமியிலிருந்து 17 கி.மீ. உயரத்தில் முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.