'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து
விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அருகிலுள்ள பூங்காவில் விளையாடச் சென்றுள்ளாா். இரவு 10 மணியளவில் விளையாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, அப்பகுதியில் எதிரே வந்த மாநில தோ்தல் ஆணையா் ஜோதி நிா்மலாவின் அரசு வாகனம் சிறுவன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவனின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அதே காரில் அழைத்துச் சென்று விருகம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுவனின் முட்டிக்கு கீழே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இந்நிலையில், சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.