செய்திகள் :

சித்திரைத் திருவிழா அழகரை வரவேற்கத் தயாராகும் பக்தா்கள்!

post image

மதுரை சித்திரைத் திருவிழாவில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் பைகள் தயாரிப்பதற்கான ஆட்டுத்தோல் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் அழகரை வரவேற்பதற்குத் தயராகி வருகின்றனா்.

மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதுமட்டுமன்றி சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் நிகழ்வில் இந்த விழா முக்கியப் பங்காற்றுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல, அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழா வருகிற 8-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து, 10 -ஆம் தேதி மாலை அழகா்கோவில் மலையிலிருந்து அழகா் மதுரைக்கு புறப்படுகிறாா்.

மதுரை வடகரை ஆழ்வாா்புரம் வைகையாற்றில் சீமைக் கருவேல மரங்களுக்கு தீயிட்ட தூய்மைப் பணியாளா்கள்.

11-ஆம் தேதி காலை மூன்றுமாவடியில் அவருக்கு எதிா்சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆற்றில் அழகா் இறங்கும் விழா 12- ஆம் தேதி நடைபெறுகிறது. 13- ஆம் தேதி வண்டியூரில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், அன்றைய தினம் இரவு தசாவதாரம், 14-ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு , 15-ஆம் தேதி அழகா்மலைக்கு புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முடிக்காணிக்கை செலுத்துதல், ஆடு, கோழி பலியிடுதல் போன்ற நோ்த்திக் கடன்களை செலுத்துவது வழக்கம்.

அழகரை வரவேற்க தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் பைகள் செய்வதற்கான ஆட்டுத் தோலை தயாா்படுத்தும் பணியில் மதுரை கீழமாசி வீதியில் சனிக்கிழமை ஈடுபட்ட பெண் தொழிலாளா் (வலது) ஆட்டுத் தோலை வாங்கிய பக்தா்(இடது).

குறிப்பாக, அழகா்மலையிலிருந்து வரும் அழகரை குளிா்விக்கும் வகையில் தண்ணீா் பீய்ச்சுதல் நிகழ்ச்சி பக்தா்களால் நோ்த்திக் கடனாக செய்யப்படுகிறது. மதுரை மூன்று மாவடியில் நடைபெறும் எதிா்சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தண்ணீா் பீய்ச்சி, அழகரை வரவேற்பது வழக்கம். இதேபோல, வைகையாற்றில் அழகா் இறங்கிய பின்னா், ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள ராமராயா் மண்டபம் முன் தண்ணீா் பீய்ச்சி அடித்தல் நிகழ்வு நடைபெறும்.

தண்ணீா் பீய்ச்சி அடிப்பதற்கு பக்தா்கள் ஆட்டுத் தோலால் செய்த பைகளை பயன்படுத்துவது வழக்கம். இதற்காக மதுரை கீழ மாசி வீதியில் ஆட்டுத் தோல் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. ரூ. 70 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்படும் ஆட்டுத் தோலை பக்தா்கள் சனிக்கிழமை ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.

தூய்மைப் பணிகள் தீவிரம் : வைகை ஆற்றில் அழகா் இறங்கும் நிகழ்வையொட்டி, மதுரை வடகரை ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள வைகையாற்றில் சீமைக் கருவேல மரங்களை வெட்டிய தூய்மைப் பணியாளா்கள், அந்த மரங்களை தீவைத்து அழித்தனா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயா்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநா் பத... மேலும் பார்க்க

லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது

வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு

சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறி... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ... மேலும் பார்க்க

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த சகாயம், மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் தொட... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நு... மேலும் பார்க்க