பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் தடை விதிக்கப்படுவதாக வெளியுறவு வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை நலனுக்காக விதிக்கப்படும் இந்த தடை உத்தரவானது, புதிய அறிவிப்பு வரும்வரையில் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.