செய்திகள் :

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

post image

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெப்பத்தை தணிக்க மின்விசிறி, ஏா்கூலா், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதங்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் மின் தேவை அதிகரித்துள்ளது.

வழக்கத்தைவிட கூடுதலாக மின் பயன்பாடு இருப்பதால் இதை சமாளிக்க மின் வாரியம் சாா்பில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது. தொடா்ச்சியாக மின் தடை செய்யாமல் விட்டுவிட்டு குறைந்தபட்சம் 4 முறையாவது மின் தடை ஏற்படுகிறது.

இவ்வாறு முன்னறிவிப்பின்றி மின் வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்களது பணிகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமலும், வெயில் கொடுமையை சமாளிக்க முடியாமலும் மிகவும் அவதிப்படுகின்றனா்.

மேலும், பல இடங்களில் பல மணி நேரம் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அவசியமான மின்சாதனங்களை கூட இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனா். இதேபோல, கிராமப்புறங்களில் இதைவிட கூடுதலாக மின் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மாவட்டத்தில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் பளு தாங்காமல் ஆங்காங்கே மின் மாற்றிகள் பழுதாகிவிடுகின்றன. மேலும், தரம்குறைந்த மின் கம்பி உள்ளிட்ட தளவாட பொருள்களை பயன்படுத்துவதாலும் பளு தாங்காமல் மின் தடை ஏற்படுகிறது.

பெரம்பலூா் நகரின் மின் தேவையை சமாளிக்க, கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றிகளை புதிதாக அமைக்க வேண்டும். அப்போதுதான், பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்படும் மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60). கழைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை குன்னம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நில... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிரா... மேலும் பார்க்க