கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
4 கிலோ போதைப் பொருள்களை பதுக்கியவா் கைது
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 4 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராமத்தில், போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழக்கணவாய் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் ரெங்கசாமி (51) என்பவா், தனது மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ரெங்கசாமியை கைது செய்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்துறையினா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ரெங்கசாமி சிறையில் அடைக்கப்பட்டாா்.