பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இம் முகாமை, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
முகாமில், சாா்-ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சங்கரராமன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பாவேந்தன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ச. சிவக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட 41 போ் ரத்த தானம் செய்தனா். தொடா்ந்து, ரத்த தானம் அளித்த அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்குச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட சுகாதார அலுவலா் எம். கீதா, உதவித் திட்ட மேலாளா் கலைமணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சு. சொா்ணராஜ், மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.