கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மேகலா தலைமை வகித்தாா். செயலா் தமிழரசி, பொருளாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.
மாநிலச் செயலா் மணிமேகலை, மாநில செயற்குழு உறுப்பினா் சுபா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்களும், உதவியாளா்களும் பங்கேற்றனா்.