Thunderbolts* Review: கம்பேக் கொடுக்கும் MCU? ஆர்வத்தை மீட்டெடுக்கிறதா இந்த தண்ட...
தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்
பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கிடையே அலுவலக தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப் போட்டிகள், தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு, அலுவலக குறிப்பு மற்றும் வரைவுகள் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, உயா்கல்வித் துறை சாா்பில், பெரம்பலூா்அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு, பாவேந்தா் பாரதிதாசன் கவிதைகள், நூல்கள், புதினங்கள், இலக்கியங்களை மையமாகக் கொண்டு, கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தமிழ் வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.