டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை மின் நிலையம் அருகே புதன்கிழமை இரவு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதே வழித்தடத்தில் சென்ற வேன் லாரியின் பின்புறத்தில் மோதி, டீசல் ஏற்றிச்சென்ற மற்றொரு டேங்கா் லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இடிபாடுகளில் சிக்கிய வேன் ஓட்டுநரான திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மோா்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் கலைச்செல்வன் (30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கலைச்செல்வனின் உடலைக் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.