செய்திகள் :

சிரியாவின் இடைக்கால அரசுக்கு எச்சரிக்கை! அதிபர் மாளிகை அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

post image

சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகிலுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்நாட்டின் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும், ட்ரூஸ் எனும் சிறுபான்மையினத்தின் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல்களை இனப்படுகொலை எனக் குறிப்பிட்ட ட்ருஸ் மக்களின் மதகுரு ஒருவர், கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று அதற்கு காரணமான சிரியாவின் இடைக்கால அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் ட்ரூஸ் இனமக்கள் வசித்து வரும் கிராமங்களை நோக்கி இடைக்கால அரசின் அதிகாரிகள் படையெடுப்பு நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசு எச்சரித்து வந்தது.

இந்நிலையில், சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகில் இஸ்ரேல் ராணுவத்தின் விமானப் படை இன்று (மே.2) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலானது, சிரியாவின் இடைக்கால அரசின் தலைவர்களுக்கான எச்சரிக்கை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஏப்.27 அன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ ட்ரூஸ் மதகுரு ஒருவரினால் பேசப்பட்டவை எனக் கருதப்படுவதினால் ட்ரூஸ் போராளிகளுக்கும் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

மேலும், ட்ருஸ் மக்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் 1967-ம் ஆண்டு போரில் சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றி ஆக்கிரமித்த கோலன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க