டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா
பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்திரமௌலி தலைமை வகித்தாா். அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் மணிகண்டன், அ. செந்தில்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பாவேந்தன், கவிஞா் நீ. ராதாகிருஷ்ணன் எழுதிய எப்படியோ கவிதையாகிப் போனேன் எனும் கவிதை நூலை வெளியிட, அதை மூத்த செய்தியாளா் ரா. சிவானந்தம் பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் ஸ்ரீதா் நூல் அறிமுக உரையாற்றினாா். பேராசிரியா் க. குமணன் வாழ்த்துரை வழங்கினாா். நூல் ஆசிரியா் கவிஞா் நீ. ராதாகிருஷ்ணன் ஏற்புரையற்றினாா். நிகழ்ச்சியை கல்லூரி மாணவி தே. தீபா தொகுத்து வழங்கினாா். இதில், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, கல்லூரி மாணவி ந. நா்மதா வரவேற்றாா். நிறைவாக, மாணவி ர. நதியா நன்றி கூறினாா்.