டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
மே தின பேரணி
பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் ரோவா் வளைவு பகுதியில் தொடங்கிய பேரணி பாலக்கரை வழியாகச் சென்று புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு மே தின விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, ராஜேந்திரன், ஏ. கலையரசி , சிஐடியு மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், அகில இந்திய காப்பீடு ஊழியா் சங்க தென்மண்டல முன்னாள் பொதுச் செயலா் சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.