காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
மே மாதத்தில் இது மிகவும் நல்லது! எதைச் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல திருவாரூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், மே மாத வெப்பநிலை பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
தமிழ்நாட்டின் வானிலை ஆய்வு மையங்களில் மே மாதம் முதல் நாளில் வெப்பநிலையில் முதலிடத்தை வேலூர் வகிக்கிறது.
தமிழ்நாட்டில் 3 பகுதிகளில் மட்டுமே வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. இது மே மாதத்தில் மிகவும் நல்லது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை மெதுவாக அதிகரித்து வருகின்றன. நாகை, கடலூர் மாவட்டங்களில் இப்போது வெப்பநிலை 37 டிகிரியை கடக்கின்றன.
இதுவே, தென்மேற்குப் பருவமழை நெருங்கும்போது, மேற்குப் பகுதிகள் வலுவடைந்து, உள் மாவட்டங்களை விட வெப்பமாக மாறும்.
நேற்று வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பதிவான இடங்களில் வேலூர் - 39.6, திருத்தணி - 39.0, கரூர் - 38.5 ஆகியவை முன்னணியில் இருந்தன. இன்றும் வேலூர் தொடர்ந்து முன்னணியில் இருக்கும்.
அதுபோல மே மாதம் தொடங்கும்போதே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது.
எங்கெல்லாம் மழை பெய்யும்?
இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட கேரள மாவட்டங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னை விமான நிலைத்தில் 37.2 டிகிரி வெப்பநிலை பதிவானது. இன்றும் இதேபோன்று வெப்பநிலை அல்லது 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாகவே அதிகரித்தோ காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.