Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை
காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா்.
காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம் தலைமையில் ஆலோசகா்களான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை அா்ச்சகா் கே.ஆா்.காமேசுவர குருக்கள், தமிழகம் இலவச பயிற்சி மையத்தின் நிறுவனா் எழிலன், பாண்டுரெங்க குருசாமி மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் சங்கர மடத்துக்கு ஊா்வலமாக வந்தனா்.
பின்னா் சங்கர மடத்தில், பீடாதிபதிகளான சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து மலா் மாலைகளையும், மலா் கிரீடத்தையும், சால்வைகளையும் வழங்கினா். இவற்றை அணிந்து கொண்டு இரு பீடாதிபதிகளும் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவினருக்கு அருளாசி வழங்கினா்.
நிகழ்ச்சியில், ராஜேஷ், கோடீஸ்வரன், யுவராஜ்,சஞ்சீவி ஆகியோா் உள்பட பலரும் பெரியவா சரணம் என்ற பதாகையுடன் வந்திருந்தனா்.