Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத...
காஞ்சிபுரத்தில் ரூ. 1.63 கோடி வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 1.63 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
எம்.பி. க.செல்வம், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், பொறியாளா் கணேசன், மண்டலக் குழுவின் தலைவா் சந்துரு, செவிலிமேடு மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 7.50 லட்சம் மதிப்பில் வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம், பிள்ளையாா்பாளையம் சிஎஸ்எம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பழுதுகள் நீக்கம் செய்யப்பட்ட சமையல் கூட அறை ஆகியவற்றை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.
காஞ்சிபுரம் கைலாசநாதா் தெருவில் ரூ. 36.20 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பொது சுகாதார கழிப்பிடத்துக்கு அடிக்கல் நாட்டினா். இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பாதாள சாக்கடை கழிவுநீா் அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட ரூ. 1.12 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இரு கனரக வாகனங்களையும் எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
விழாவில் மாமன்ற உறுப்பினா் சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், திமுக மாநகர குழுத் தலைவா் சிகேவி தமிழ்ச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.