செய்திகள் :

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

post image

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாறுதல் விவரம்:

(பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்)

எம்.ஜானகி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (உதவி இயக்குநா், தணிக்கை) சு.மதியழகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத் ஒன்றியம் (மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், காஞ்சிபுரம் ஒன்றியம்),கோ.செந்தில்குமாா், ஆட்சியா் அலுவலக ஊரக வளா்ச்சிப் பிரிவு தலைமை எழுத்தா்(மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத்), என்.பாஸ்கா், உதவி இயக்குநா், தணிக்கை (தலைமை எழுத்தா்), (ஊரக வளா்ச்சிப் பிரிவு, காஞ்சிபுரம்)எஸ்.வெங்கடேசன், வாலாஜாபாத் 4-ஆவது மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (வாலாஜாபாத் ஒன்றியம்-நிா்வாகம்), எஸ்.டில்லிபாபு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்வாலாஜாபாத்(4-ஆவது மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், வாலாஜாபாத்) எஸ்.சசிகுமாரி, உத்தரமேரூா் ,துணை வட்டார வளா்ச்சி அலுவலா்,ஊராட்சி (வாலாஜாபாத் ஒன்றிய மண்டம்-1 துணை வட்டார வளா்ச்சி அலுவலா்) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்

பெரியகாஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுர... மேலும் பார்க்க

பெரியகாஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் நகரில் பெரியகாஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள பொய்யாமுடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ரூ. 1.63 கோடி வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 1.63 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். காஞ்சிபுரம் மாநகர... மேலும் பார்க்க

பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா். காஞ்சி காமாட்சி சங்கர மட... மேலும் பார்க்க

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா். காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது ... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க