செய்திகள் :

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

post image

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது 4 பேரை தூத்துக்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னை தனிப்படை போலீஸார் தூத்துக்குடியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (70), விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.

இதனிடையே, மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும், அதனை விற்பனை செய்து தரும்படியும் இடைத்தரகா்களான சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராகுல் (30), மணலி சேக்காடு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (45) மற்றும் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சுப்பன் (45) ஆகியோரை அணுகியுள்ளாா்.

இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்கள் தங்களுடன் ராஜன் மற்றும் அவரின் நண்பா் விஜய் மற்றும் உதவியாளா் அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ. 23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா்.

திமுக பொதுக்கூட்ட மேடையில் சாய்ந்த மின்விளக்கு கம்பம்

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தை கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஒரு அறைக்கு சந்திரசேகரை வரவைத்துள்ளனா். ஹோட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் வந்திருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா்.

ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஹோட்டல் நிா்வாகம் கொடுத்த தகவலின்படி, ஜானகி, அவரது நண்பா் சுப்பிரமணி, ஓட்டுநா் ஆகாஷ், இடைத்தரகா்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் தியாகராய நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடவுச் சீட்டை உடனடியாக ஒப்படைக்க ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.மேலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாகவும் சிபிஐ விசாரணை தொடர்பாகவும் பத்திரிகை மற்று... மேலும் பார்க்க

விஜய் வருகை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு

மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வரவுள்ள நிலையில் பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.ஜனநாயகன் பட படப்பிடிப்பில் பங்கேற்க கொடைக்கானல் சென்ற விஜய் மதுரை வழியாக சென்னை செல்லவுள்ளார... மேலும் பார்க்க

சகாயத்துக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய படைக்கு உத்தரவிட நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏ... மேலும் பார்க்க

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சித்திரை மாதத்தில் தா... மேலும் பார்க்க

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. வழக்கமாக எந்த நேரத்திலும் பஜாரில் நடமாடும் காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் பலருக்கு தங்கம் எட்டா பொருளாகி வருகிறது. அதன்படி சென்னையில் திங்கள... மேலும் பார்க்க