கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்
பெரியகாஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுரு, நிா்வாகிகள் சுப்பராயன், பெருமாள் கலந்து கொண்டனா். கொடியேற்றத்துக்குப் பின்னா் சுவாமியும், அம்மனும் காலையில் பவளக்கால் சப்பரத்திலும் மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

விழாவையொட்டி காலை , மாலை வேளைகளில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வரவுள்ளனா். மே 8-இல் காலை அதிகார நந்தி சேவைக் காட்சி, மாலையில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 10-இல் தேரோட்டம், 12-இல் ஆலயத்தின் மகிமையை விளக்கும் ஸ்தல மகிமைக் காட்சி, 13 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம், 16-இல் தங்க இடப வாகனக் காட்சி, 18-இல் ஊஞ்சல் உற்சவம், 21-இல் புஷ்பப் பல்லக்கு உற்சவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.