வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜ...
கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி
மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26), ஃபாத்தில்(27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று ஞாயிற்றுக்கிழமை காலை மலையேற்றத்தில் ஈடுபட்டனர். உடன் மலைப்பாதை வழிகாட்டிகளும் இருந்தனர்.
சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை- 4 பேர் கைது
பின்னர் அவர்கள் மாலை 4.30 மணியளவில் மலை அடிவாரத்துக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நீரிழப்பு காரணமாக அஜ்சல் மயக்கமடைந்தார். உடனே அவர் வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
வனத்துறையினர் அஜ்சலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, ஆனைமலை போலீசில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்ட வந்தது தெரியவந்தது. அஜ்சலின் உடற்கூராய்வு திங்கள்கிழமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.