நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்
சம்பித் பத்ரா மணிப்பூர் பயணம்: எம்எல்ஏக்களுடன் முக்கிய சந்திப்பு!
பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளர் சம்பித் பத்ரா திங்கள்கிழமை மணிப்பூர் வந்து மெய்தி, குகி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்பால் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பத்ரா ஹெலிகாப்டர் மூலம் சூரசந்த்பூருக்குச் சென்றார். அங்கு அவர் குகி அமைப்புகளின் தலைவர்களையும் மாவட்டத்தில் உள்ள பாஜக எம்எல்ஏக்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பித் பத்ராவை பாஜக மணிப்பூர் பொதுச் செயலாளர் கே. சரத் குமார் வரவேற்றார்.
மணிப்பூர் மாநிலத்திற்கு 21 எம்எல்ஏக்கள் தனித்தனியாகக் கடிதங்கள் எழுதி, குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள வடகிழக்கு மாநிலத்தில் அமைதி, இயல்பு நிலையை உறுதி செய்வதற்காக "மக்கள் அரசை" அமைக்க வலியுறுத்தினர்.
அதே வேண்டுகோள் அடங்கிய கடிதங்களில், 13 பாஜக எம்எல்ஏக்கள், 3 என்பிபி சட்டப்பேரவை உறுப்பினர்கள், 3 நாகா மக்கள் முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள், இரண்டு சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்த கடிதங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு ஏப்ரல் 29 அன்று தனித்தனியாகக் கிடைத்தன.
மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் கொண்டுவருவதற்கான ஒரே வழி மக்கள் அரசை அமைப்பதுதான் என்று நாங்கள் கருதுகிறோம் என்று எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
சூரசந்த்பூருக்கு சென்ற பத்ரா, இம்பாலில் உள்ள பாஜக எம்எல்ஏக்களை சந்திக்கவுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் பத்ரா கடைசியாக மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார்.
என். பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த தலைமை ஆட்சியமைக்கும்
கடந்த மே 2023 முதல் மணிப்பூரில் மெய்தி, குகி சமூகங்களுக்கு இடையேயான இன வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.