செய்திகள் :

ஓலா ரோட்ஸ்டர் டெலிவரியில் தாமதம்! இதுவரை ஒரு வண்டி கூட விற்கவில்லை!

post image

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மின்னணு இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குக் கூட இன்னும் இந்த இருசக்கர வாகனங்கள் கொண்டு சேர்க்கப்படவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஓலா நிறுவனம் மின்னணு இருசக்கர வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ரோட்ஸ்டர் இருசக்கர வாகனத்துக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் முன்பதிவு தொடங்கிய நிலையில், 1,395 பேர் இதுவரை ரோட்ஸ்டர் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளனர்.

முன்பதிவு செய்தவர்களுக்கு மே மாதத்திலிருந்து டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவித்தபடி வாகனங்களை டெலிவரி செய்வதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாமதத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஓலா நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், ’ஹோமோலோகேஷன்’ செயல்முறையால் தாமதம் ஏற்படுவதாகத் தெரிகிறது.

அதாவது, புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட நாடு அல்லது நிலப்பரப்புக்கு ஏற்ப பாதுகாப்பு, சாலை இயங்கு திறன் கொண்டுள்ளதா? என்பதை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் முறையில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை கொண்டுசேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அது எந்த அளவுக்கு எனில், இதுவரை ஒரு வாகனம் கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

சிறப்புகள் என்னென்ன?

மின்னணு வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஓலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரோட்ஸ்டர், எக்ஸ் மற்றும் எக்ஸ்+ என்ற இரு வகைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

ரோட்ஸ்டர் எக்ஸ், 5 kWh, 3.5 kWh, மற்றும் 4.5 kWh என மூன்று வகையிலான பேட்டரி திறன்களுடன் வருகிறது. அதிகபட்சமாக 118 kmph வேகம் செல்லக்கூடியது. வெறும் 3.1 வினாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 252 கி.மீ. தூரம் செல்லக்கூடியது.

ரோட்ஸ்டர் எக்ஸ்+ வகையானது, 4.5 kWh மற்றும் 9.1 kWh பேட்டரி திறன்களுடன் வருகிறது. இந்த வகையில் அதிகபட்சமாக 125 kmph வேகத்தை எட்டமுடியும். 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ. வேகத்தை எட்டும் திறன் கொண்டது. சிறிய பேட்டரியில் 252 கி.மீ. தூரமும், பெரிய பேட்டரியில் 501 கி.மீ. தூரமும் செல்லக்கூடியது.

இதையும் படிக்க | சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் 4வது காலாண்டு லாபம் 13% சரிவு!

புதுதில்லி: எப்.எம்.சி.ஜி. நிறுவனமான, பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 13 சதவிகிதம் சரிந்து ரூ.30.98 கோடியாக உள்ளது.இதுகுறித... மேலும் பார்க்க

சவுண்ட்பார் - ஸ்பீக்கர்: வேறுபாடுகள் என்னென்ன?

சவுண்ட்பார்களும் ஸ்பீக்கர்களும் ஒலியின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் தனித்துவமான பலன்களும், பயன்படுத்தப்படும் நோக்கமும் பாடல்களைக் கேட்கும் விருப்பத்தைப் பொறுத்து... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக மு... மேலும் பார்க்க

12 நாள்களில்... இந்திய பங்குச் சந்தையில் ரூ.40,145 கோடி வெளிநாட்டு முதலீடு!

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ. 40,145 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஏப்ரம் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,243 கோடியை மட்டுமே... மேலும் பார்க்க

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 547.04 புள்ளிகள் உயர்ந்து 81,049.03 புள்ளிகளாக இருந்தது.... மேலும் பார்க்க

சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக மடிக்கக்கூடிய ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆப்பிள் ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ என்ற இரு வகைகளில் உருவாகும் மடிக்கக் கூடிய போன்களை 2026 ஆம் ஆண்டில் ஆப்பிள்... மேலும் பார்க்க