செய்திகள் :

சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஆப்பிள் ஐ-போன்! 2026-ல் அறிமுகம்!

post image

சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக மடிக்கக்கூடிய ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஆப்பிள் ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ என்ற இரு வகைகளில் உருவாகும் மடிக்கக் கூடிய போன்களை 2026 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுசெயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பிரீமியம் பயனர்கள் உள்ளனர். விலை அதிகம் என்றாலும், அதன் சிறப்பம்சங்களுக்காகவும் தரத்துக்காகவும் ஆப்பிள் பிரான்டை பயன்படுத்துபவர்கள் ஏராளம்

எனினும், ஆப்பிள் நிறுவனத்தை விட கூடுதல் சிறப்பம்சங்களை அறிமுகம் செய்து பயனர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறது தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம்.

ஆப்பிள் ஐ-போன்கள் சிறிய அளவில் கூட தயாரிக்கப்பட்டாலும், சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கையடக்க வகையில் இருப்பதால் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், அத்தகைய பயனர்களைக் கவர்வதற்காக மடிக்கக் கூடிய ஐ-போன்களை தயாரிப்பதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களை 2026 நவம்பரில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே மடிக்கக் கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்துவரும் நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கும் வகையில், புதிய அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் புகுத்தவுள்ளது.

அவற்றிற்கு ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பெயரிடப்பட்டுள்ளதைப் போன்று, ஐ-போன் ஏர், ஐ-போன் ப்ரோ எனப் பெயர் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இதன் வடிவம் குறித்த எந்தவொரு புகைப்படத்தையோ, விடியோவையோ ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

இதையும் படிக்க | மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!

மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக மு... மேலும் பார்க்க

12 நாள்களில்... இந்திய பங்குச் சந்தையில் ரூ.40,145 கோடி வெளிநாட்டு முதலீடு!

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ. 40,145 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஏப்ரம் மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,243 கோடியை மட்டுமே... மேலும் பார்க்க

அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 547.04 புள்ளிகள் உயர்ந்து 81,049.03 புள்ளிகளாக இருந்தது.... மேலும் பார்க்க

ஓலா ரோட்ஸ்டர் டெலிவரியில் தாமதம்! இதுவரை ஒரு வண்டி கூட விற்கவில்லை!

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மின்னணு இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குக் கூட இன்னும் இந்த இருசக்கர வ... மேலும் பார்க்க

விரைவில் அறிமுகமாகிறது மோட்டோரோலா ஜி96!

மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக ஜி 96 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இதற்கு முன்பு மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது ஜி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செ... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை இன்று(மே 5) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 11 மணியளவில் 449 புள்ளிகள் அதிகரித்து 80,951.28 புள்ளிகளில் வர்... மேலும் பார்க்க