Samantha: "நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை...
மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!
வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.
”குழந்தைகள் புனிதமானவர்கள்!” என்று போப் சொல்லியிருப்பதன்படியே அவரது கடைசி ஆசையும் அவர்களுக்காவே அமைந்திருக்கிறது. தம் இறுதிமூச்சு வரை மனிதநேயத்தையும் கருணையையும் அணிகலன்களாகக் கொண்டிருந்த போப் பிரான்சிஸ், காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தமது வாகனத்தை அர்ப்பணித்திருக்கிறார்.

அங்கு பல்வேறு தாக்குதல்களில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அவர்களிருக்கும் இடங்களுக்கே இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்பதே அன்னாரது விருப்பமாகும்.