பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், பொருள் சேதங்கள் அல்லது உயிர் சேதங்கள் பற்றிய தகவல்களை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.