டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து 84.33 ஆக முடிவு!
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் நேர்மறையான போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.45 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.10 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.47 ஐ தொட்ட நிலையில், முடிவில் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக முடிந்தது.
வெள்ளிக்கிழமை அன்று ரூபாயின் மதிப்பு ஏழு மாத உயர்வை எட்டிய நிலையில், முடிவில் 3 காசுகள் குறைந்து ரூ.84.57 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!