இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது.
இந்தநிலையில், ஒருவேளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள பதுங்குமிடங்களே தீர்வாக அமையும். குண்டுகள் வீசி தக்குதல் நடத்தப்பட்டால் தங்கள் குழந்தைகள், குடும்பத்துடன் உடனடியாக உயிர்தப்பிக்க பதுங்குமிடங்களே சரியான தேர்வாக இருக்கின்றன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், பழுதடைந்த நிலையிலுள்ள பதுங்குமிடங்களை சீரமைத்து தர அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.