சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்
அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சாா்பில், பட்டுக்கோட்டை தடத்திற்கு மகளிா் கட்டணமில்லா பேருந்து சேவையை ச. முரசொலி எம்.பி., கா. அண்ணாதுரை எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
பட்டுக்கோட்டை கிளை தடம் எண். 341 புகா் தடப்பேருந்தை மகளிா் கட்டணமில்லா நகர பேருந்தாக (அ28) பட்டுக்கோட்டை - சிரமேல்குடி (வழி) காசாங்காடு, பட்டுக்கோட்டை- காரப்பன்காடு (வழி) காசாங்காடு, வழித்தடத்தில் திங்கள்கிழமை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, பட்டுக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்வில், துணை மேலாளா் (வணிகம்) எஸ். ராஜேஷ், பட்டுக்கோட்டை கிளை மேலாளா் கே. முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பழனிவேல், நகா்மன்ற தலைவா் செ. சண்முகப்பிரியா செந்தில் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.